கடலூர்

ஜன.21-ல் முதல்வரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம்: அரசு பணியாளர் சங்கம்

27th Dec 2020 05:01 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: தமிழக முதல்வர் எங்களது 24 அம்ச கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தி 21-1-2021 அன்று சென்னையில் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு தமிழக முதல்வரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிதம்பரம் கடலூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்து பேசினார். நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா வரவேற்றார். அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் வே.மணிவாசகம், பி.மகாமணி, பல்வேறு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் எம்.கிருஷ்ணன், பி.பெரியசாமி, ச.ராமச்சந்திரன், ம.கோதண்டம், கோ.சீனுவாசன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.பிச்சமுத்து, சத்துணவு பணியாளர் சங்க ர.ஞானஜோதி, அங்கன்வாடி பணியாளர் சங்க என்.ஆர்.கவிதா, மற்றும் வெ.சிவக்குமார், டி.ஜெய்கணேஷ், ஆர்.சாமிநாதன், துரை.சேகர், கு.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாநில பொருளாளர் எஸ்.சாகுல்அமீது நன்றி கூறினார்.

பின்னர் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஓய்வூதியம் இல்லாத அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1-4-2003க்கு பின்பு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை தொடர வேண்டும். நிரத்திர ஊதியம் இல்லாத சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள் அனைவருக்கு நிரந்திர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் மதுபானக்கடை பணியாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு கோரிக்கைகளுக்கு கமிட்டி அமைத்தும், இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. சாலை பணியாளர்களுக்கு 41 மாத நிரந்திர பணிநீக்கத்தை நீக்கி, இடைப்பட்ட காலத்தை பணிக்காலமாக நிர்ணயித்து பணப்பலனை வழங்க வேண்டும் உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேலும் தமிழக முதல்வர் எங்களது சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்ற 25 வது கோரிக்கையை முன் வைத்து வருகிற 21-1-2021 அன்று சென்னையில் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு தமிழக முதல்வரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

மேலும் திருத்துறைபூண்டியில் அரசு பணியாளர் சங்க கொடியை பிடிங்கி எறிந்தவர் கைது செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் நியாயமான அரசு பணியாளரை பொய் புகார் குற்றம் சுமத்தி, அந்த மாவட்ட பொது நூலக அலுவலர் தற்காலிக வேலைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதே போல் பெண் பணியாளர்கள் அவமான படுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அரசு அளித்து வந்த தர ஊதியமான 1300 தொகையை, 1200-ஆக குறைத்த பேரூராட்சி இயக்குநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிட மாற்றம், பதவி உயர்வு, பணி நியமனத்தில் உள்ள முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என புரட்சி செய்வோம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT