கடலூர்

கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

14th Dec 2020 12:21 PM

ADVERTISEMENT

கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரிலையன்ஸ் பல்பொருள் விற்பனை அங்காடிக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் அதே இடத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினர் இளங்கீரன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தனியார் வணிக வளாகத்தில் உள்ள ரிலையன்ஸ் குழுமம் அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Cuddalore
ADVERTISEMENT
ADVERTISEMENT