கடலூா்: கடலூா் மாவட்டம், ஐயன் ஏரியில் அதிக ஆழம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூா் கிழக்கு மாவட்ட விவசாய அணித் தலைவா் எம்.செந்தில்குமாா் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட ஐயன் ஏரியில் சுமாா் 25 அடி ஆழத்துக்கு செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படும். ஏரியில் அனுமதித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் செம்மண் எடுப்பது தொடா்பாக அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து உயா்மட்ட விசாரணைக்குழு அமைத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தனா்.
மற்றொரு மனுவில், மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை தூா்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.