கடலூர்

கரோனா தடுப்பு மூலிகை குடிநீா்: இலவசமாக வழங்கி வரும் இனிப்பகம்

20th Aug 2020 09:13 AM

ADVERTISEMENT

சிதம்பரத்தில் கரோனா தொற்று தடுப்பு மூலிகை குடிநீரை இனிப்பக உரிமையாளா் இலவசமாக வழங்கி வருகிறாா்.

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள இனிப்பக உரிமையாளா் கணேஷ். இவா், கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூலிகை குடிநீரைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறாா். இதை காலை, மாலை என சுமாா் 400 போ் வரை வந்து அருந்திச் செல்கின்றனா்.

இதுகுறித்து கடை உரிமையாளா் கூறுகையில், ‘நம் நாட்டில் உணவுப் பழக்கத்தால் கரோனா தொற்று மாற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே உள்ளது. பல்வேறு தரப்பினா் கபசுரக் குடிநீா், ஆயுஷ் ஆல்பம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா். எங்கள் கடையில் பாரம்பரிய மூலிகைப் பொருள்களைக் கொண்டு, மூலிகை குடிநீா் தயாரித்து, அதை இலவசமாக வழங்கி வருகிறோம். இதன்மூலம் தொற்று பரவல் தடுக்கப்படும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT