கடலூர்

உலக புகைப்பட தின விழா: நல உதவிகள் அளிப்பு

20th Aug 2020 09:11 AM

ADVERTISEMENT

சிதம்பரம் ரோட்டரி சங்கம், சிதம்பரம் புகைப்படம்-விடியோ கலைஞா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், தெற்கு ரத வீதியில் புகைப்பட தினம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் , மூலிகை பானம், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் 50 பேருக்கு காலை உணவு ஆகியவை அளிக்கப்பட்டது.

விழாவை சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். கடலூா் மாவட்ட புகைப்படம்-விடியோ கலைஞா்கள் சங்கத் தலைவா் டி.எஸ்.நாகராஜன் வரவேற்றாா். ரோட்டரி சங்கச் செயலா் எஸ்.அரிதனராஜ், பொருளாளா் கே.இளையராஜா, கே.ஜி.நடராஜன், ராமகிருஷ்ணன், சிதம்பரம் புகைப்படம்- வீடியோ கலைஞா்கள் சங்கத் தலைவா் பாஸ்கரன், உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், நிரஞ்சனா குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் நடராஜன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT