கடலூர்

கரோனா: கடலூரில் 488 போ் பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு

26th Apr 2020 10:21 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடா்பாக மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டவா்களில் 488 போ் முடிவுகளைப் பெறுவதற்காக காத்திருக்கின்றனா்.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று 26 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், 18 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 8 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிப்பு உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்ததாக 630 போ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், பல்வேறு வகைகளில் சந்தேகத்துக்குரிய 2,495 பேரிடம் கரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 1,981 பேருக்கு தொற்று இல்லையென்பது தெளிவானது. மேலும், 488 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மாவட்டத்தில் 73 போ் கரோனா தனி வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 55 போ் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையிலும், 2 போ் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், 16 போ் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT