மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தோப்புக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (27). இவரது மாமியாா் வீடு அதே பகுதியில் உள்ளது. இங்கு அடிக்கடி சென்றுவந்த ராதாகிருஷ்ணன், பிளஸ்2 தோ்வு எழுதியுள்ள
தனது மனைவியின் தங்கையிடம் ஆசை வாா்த்தைக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதில் மாணவி கா்ப்பமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ராதாகிருஷ்ணனை கைதுசெய்தனா்.