கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 4.86 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு கூடுதலாக அரிசி

DIN

கடலூா் மாவட்டத்தில் 4.86 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படுகிறது.

ஊரடங்கால் பொதுமக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அவா்களுக்கு நிவாரண உதவித் தொகைகள்,பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சாா்பில் குடும்ப அட்டைக்கு ரூ.ஆயிரம், அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (பிஎச்எச்) பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவுடன் ஏப்ரல் மாதத்துக்கு பயனாளி ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் முன்னுரிமை அட்டைகள் 4,01,559 மூலமாக 13,39,192 பேருக்கும், 84,556 அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள் மூலமாக 3,07,216 பேருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி கிடைக்கும். இந்த அரிசி ஏப்.20 முதல் ரேஷன்கடைகளில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு அந்தந்த பகுதிக்குள்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளா் மூலமாக நாள், நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. நியாய விலைக்கடைக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்குமாறும் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT