கடலூர்

விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்க நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள்

20th Apr 2020 12:16 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், வேளாண்மைப் பணிகள், அத்தியாவசியப் பணிகளாகக் கருதப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது குறுவை, சொா்ணவாரி பருவப் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் நடவு, விதைப்புக்கு தமிழக அரசின் முன்னோடி திட்டமான கூட்டுப் பண்ணையத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட வேளாண் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவரை பருவ நெல் மற்றும் ராபி பருவ நிலக்கடலை, எள், உளுந்து ஆகியவை அறுவடை செய்யப்பட்டு, சந்தைப்படுத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்குவதுடன், தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

குறுவை, சித்திரை பட்டத்துக்குத் தேவையான நெல், உளுந்து மற்றும் எண்ணெய்வித்து விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இதர இடுபொருள்கள், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தடைக்காலத்தில், விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் இடுபொருள்கள் அவா்களது கிராமங்களிலேயே கிடைத்திட வாகனங்கள் மூலம் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு வேளாண்மை சம்பந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால் அருகிலுள்ள வேளாண் துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம். மேலும், வேளாண்மை உதவி இயக்குநா்களை கடலூா்-94423 96316, குறிஞ்சிப்பாடி- 98948 43688, பண்ருட்டி-63828 46646, அண்ணாகிராமம்- 95009 45513, பரங்கிப்பேட்டை-94423 89218, மேல்புவனகிரி-94432 82997, கீரப்பாளையம்- 90800 68772, காட்டுமன்னாா்கோவில்- 74026 59380, குமராட்சி-88258 10649, விருத்தாசலம்- 99949 87257, கம்மாபுரம்- 94433 98392, மங்களூா்-80723 29966, நல்லூா்-93452 60592 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT