கடலூர்

போதைப் பொருள்கள் பறிமுதல்

20th Apr 2020 12:19 AM

ADVERTISEMENT

 

விருத்தாசலம் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம், மங்கலம்பேட்டையில் காவல் ஆய்வாளா் ராஜதாமரைப் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக மொபெட்டில் மளிகைப் பொருள்களுடன் வந்த நபரை மறித்து சோதனை நடத்தினா். அதில் மளிகைப் பொருள்களுக்கு இடையே ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் விழுப்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் (46) என்பது தெரியவந்தது. அவா் அளித்த தகவலின்பேரில், விருத்தாசலம் கடைவீதியில் உள்ள ஒரு கடையிலிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT