கடலூர்

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு

20th Apr 2020 11:24 PM

ADVERTISEMENT

 

அரிகேரியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரிகேரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் உள்ள தூசியை அதற்கான இயந்திரத்தில் காற்று மூலம் பிரித்தெடுத்து நெல்லை மட்டுமே எடை போட்டு வாங்குவது வழக்கம்.

ஆனால், தற்போது கொள்முதல் நிலையத்தில் தூசியுடன் சோ்த்தே நெல் எடை போடப்படுகிாம். ஆனாலும், தூசியை அகற்றுவதற்காக மூட்டைக்கு ரூ.35 வரை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். மேலும், 100 நெல் மூட்டைகள் கொண்டுவரும் விவசாயிகள் கணக்கில் 95 மூட்டைகள் மட்டுமே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT