கடலூர்

கடலூரில் இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’

7th Apr 2020 03:30 AM

ADVERTISEMENT

கடலூா்: கடலூரில் தடையை மீறி செயல்பட்டதாக 4 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் இறைச்சி, மீன் கடைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடலூரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம் பகுதிகளில் 2 இறைச்சிக் கடைகள் தடையை மீறி செயல்பட்டதாக தகவல் பரவியது. கடைகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளை நகராட்சி ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இதேபோல, திங்கள்கிழமை தடையை மீறி கடலூா் முதுநகரில் மீன்கடையும், செம்மண்டலத்தில் ஆட்டிறைச்சி கடையும் இயங்கியது தெரியவந்தது. இந்த 2 கடைகளையும் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, வட்டாட்சியா் கோ.செல்வகுமாா் ஆகியோா் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT