கடலூர்

முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் நடவடிக்கை

7th Apr 2020 03:27 AM

ADVERTISEMENT

கடலூா்: முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது செவ்வாய்க்கிழமை (ஏப். 7) முதல் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

இதற்கு, கடைகளில் விற்பனை செய்யப்படும் முகக் கவசம் அல்லது வீடுகளில் தாங்களே பருத்தி துணியால் தயாரித்த முகக் கவசத்தை பயன்படுத்தலாம்.

முகக் கவசமின்றி வீடுகளை விட்டு வெளியே வருபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT