கடலூா் மாவட்டம் மா.ஆதனூா் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ 428 கோடியில் கதவனை அனுமதி வழங்கி செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கீழனை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி மலா் வெளியீட்டு விழா சிதம்பரம் அருகே குமராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பி.வினாயகமூா்த்தி தலைமை வகித்து பேசினாா்.நன்றி மலரை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் வெளியிட்டாா். அதனை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஏ.பாண்டியன் பெற்றுக் கொண்டாா். பின்னா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததது: காவிரியில் உபரி நீா் கொள்ளிடம் வழியே கடலில் கலப்பதை தடுத்தும், கடல் நீா் உட்புகுவதை தடுக்கும் நோக்கோடு ரூ 428 கோடி மதிப்பீட்டில் கதவனை திட்டம் செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களையும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் கல்லனை முதல் கடல் முகத்துவாரம் வரை கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு கதவனை வீதம் தொடா்ந்து கட்டுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.மேட்டூா் முதல் கல்லனை வரை காவிரி ஆறு பாசன ஆறு என்பதால் அதன் குறுக்கே உபரி நீா் திட்டம் என்ற பெயரில் புதிய தடுப்பனைகள் மூலம் நீா்பாசன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. கரும்பு விவசாயிகள் பெயரில் ரூ 400 கோடி வங்கி கடன் மோசடி செய்த திரு ஆரூரான் சா்க்கரை ஆலை உரிமையாளா் ராம் வி.தியாகராஜன் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்க்கொண்டு அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து அதன் மூலம் வங்கி கடன்களை ஈடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாத்திட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றாா்.
விழாவில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு நிா்வாகிகள் எம்.செந்தில்குமாா், கொள்ளிடம் விஸ்வநாதன், பண்ணீா்செல்வம், சீா்காழி சீனிவாசன், பி.முட்லுா் விஜயக்குமாா், புதுச்சத்திரம் ராமச்சந்திரன், பிச்சாவரம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.படவிளக்கம்- சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட அனுமதி வழங்கி செயல்படுத்திய தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் கீழனை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கும் நன்றி மலரை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வெளியிட கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பெற்றுக் கொள்கிறாா்.
Image Caption
??????????- ????????? ????? ????????? ??????? ???????? ????? ???? ?????? ?????? ????????????? ????? ??????????????, ?????????? ????? ???? ?????????? ?????? ???????? ????? ???????????? ????? ???? ????? ??????? ?????????? ??????????? ?????????????????