கடலூர்

திமுகவினருக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம்

22nd Sep 2019 07:53 PM

ADVERTISEMENT

கடலூா் கிழக்கு மாவட்ட திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சிக் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளா்கள், சட்டமன்ற தொகுதி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வாா்டு உறுப்பினா்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் வரும் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

வடலூரிலுள்ள மங்கையா்கரசி திருமண மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாள் எம்.எம்.அப்துல்லா ஆலோசனை வழங்குகிறாா். எனவே, தகவல் தொழில்நுட்ப அணியின் அனைத்துத் தரப்பினரும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT