விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவைச் சேர்ந்த டி.செல்வராஜ் (60) வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், விருத்தாசலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தீபக்சந்த், மணிகண்டன், பிரதீப் ஆகியோர் செய்தனர்.