விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கலை கல்லூரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கல்லூரியின் புதிய முதல்வராக கோ.இராஜவேல் அண்மையில் பொறுப்பேற்றார். அவரை முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, திரு.கொளஞ்சியப்பர் கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியாக இருப்பதால் கல்லூரியின் நுழைவாயில் முன் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். கல்லூரியில் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லூரி முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் சி.சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் ரெ.புஷ்பதேவன், இணைச் செயலர் ச.ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ஜெ.அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.