சிதம்பரம் ஆறுமுகநாவலர் நிலையத்தில் சமூக சிந்தனையாளர் பேரவை சார்பில், "தேசிய கல்விக் கொள்கை-2019' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.ராகவேந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புச் செயலர் வா.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்றினார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்புத் தலைவர் டி.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க பொதுச் செயலர் க.அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கருத்தரங்கில் புதிய கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரிக்கவும், சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதிக்கு எதிராக உள்ளதால் அதை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் பேரவை துணைத் தலைவர் ஆ.செல்வநாதன் நன்றி கூறினார்.