கடலூர்

விக்ரம் லேண்டருக்காக சிறப்பு வழிபாடு

10th Sep 2019 08:34 AM

ADVERTISEMENT

விக்ரம் லேண்டருக்காக கடலூர் அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 நிலவை முழுமையாக ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அண்மையில் சந்திராயன்-2 
விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. இதில், விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 
இந்த நிலையில், விக்ரம் லேண்டர்  மீண்டும் செயல்பட வேண்டும் என சிறப்பு வழிபாடு கடலூரில் நடைபெற்றது. கடலூரில் நேரு இளையோர் மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் இயற்கை இளையோர் மன்றம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள நகராட்சி தொடப் பள்ளியில் சர்வமத வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ப.கீதா தலைமை வகித்தார். இளையோர் மன்றத் தலைவர் புவனேஸ்வரி, ஆலோசகர் இரா.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஓய்வு பெற்ற பேராசிரியர் அ.அர்த்தநாரி, நேசங்களின் பாதம் ஊழியங்களின் அருள்தந்தை அனிதா சம்பத், கருவூலத் துறை ஓய்வுபெற்ற அலுவலர் முகமது முஸ்தபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வழிபாடு செய்தனர். ஆசிரியர் என்.வினயா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அறிவியலுக்கு அப்பாற்பட்டு கடவுளின் துணையும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. 
எனவே, கடவுளின் துணை கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்வமத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததாகவும், இந்திய விண்வெளித் துறையின் இந்த சரித்திர சாதனை தற்காலிகமாக மட்டுமே தடைப்பட்டுள்ளதாகவும் இரா.சண்முகம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT