கடலூர்

கரிவெட்டி கிராமத்தில் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது: வ.கௌதமன்

10th Sep 2019 08:34 AM

ADVERTISEMENT

கரிவெட்டி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ.கெளதமன் கூறினார். 
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 
வ.கெளதமன் பங்கேற்று மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 
  புவனகிரி வட்டம், கரிவெட்டி கிராமத்தில் உள்ள மக்களை இடம் மாற்றம் செய்து, அவர்களது நிலங்களை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், அந்த கிராம மக்கள் தங்களது வாழ்விடத்தை விட்டுச் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவர்களை என்எல்சி நிர்வாகம் காவல்துறையின் ஒத்துழைப்போடு வலுக்கட்டாயமாக அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பூந்தோட்டம் கிராமத்தில் வசிக்கும் 300 குடும்பத்தினருக்கான மயானம் வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. ஆனால், அந்த மயானத்துக்குச் செல்ல பாதை வசதி இல்லை. எனவே, மயானத்துக்கு பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT