கடலூர்

விநாயகர் சிலைகள் கரைப்பு

7th Sep 2019 08:40 AM

ADVERTISEMENT

மங்கலம்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
 விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்.2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் உரிய அனுமதியுடன் சுமார் 1,400 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் அமைத்து வழிபாடு நடத்தினர். இந்த சிலைகளை கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை, பரங்கிப்பேட்டை, வடவாறு உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. விழாவையொட்டி கடந்த 4-ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.
 மங்கலம்பேட்டையில் 53 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 30 சிலைகள் அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. எஞ்சிய 23 சிலைகளை 2 லாரிகள் மூலம் வெள்ளிக்கிழமை கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரைக்கு கொண்டுவந்து கரைத்தனர். பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏடிஎஸ்பி பாண்டியன் தலைமையில், ஏஎஸ்பி தீபா சத்யன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT