கடலூர்

மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 08:45 AM

ADVERTISEMENT

மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிறப்புத் தலைவர் சி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். கேங்மேன் என்ற பதவியை கள உதவியாளர் என மாற்றிட வேண்டும். 1.12.2019 முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். வேலைப் பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய பதவிகளை அனுமதிக்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் சரண்டர், வருங்கால வைப்பு நிதி பணப் பட்டியல் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 
பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து விசா கமிட்டி வழிகாட்டுதல் அடிப்படையில் தொழிற்சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய பாலியல் புகார் கமிட்டியை வட்ட வாரியாக அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலர் டி.பழனிவேல், மாவட்டச் செயலர் என்.தேசிங்கு, மாவட்டப் பொருளாளர் என்.கோவிந்தராசு, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஆர்.ஜெயக்குமார், டி.முருகன், என்.கண்ணன், டி.தனசேகரன், வி.தனுசு, டி.செங்குட்டுவன், மாவட்ட இணைச் செயலர்கள்  பன்னீர்செல்வம், ஆர்.ஆறுமுகம், எஸ்.சேகர், ஆர்.ராஜா, ஜே.வெற்றிவேல், டி.ஜீவா, ஜே.சுப்பிரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி, எம்.வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT