கடலூர்

மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

7th Sep 2019 08:46 AM

ADVERTISEMENT

கடலூரில் ஆசிரியர் தினத்தன்று மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு  விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தாமஸ். கடந்த வியாழக்கிழமை பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. அப்போது, ஆசிரியர் தாமஸ் மது போதையில் வகுப்புக்கு வந்தார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் விசாரித்தபோது ரகளையில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில் புதுநகர் போலீஸார் விரைந்து வந்து தாமஸை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கடலூர் மாவட்டக் கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி, ஆசிரியர் தாமஸை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதையடுத்து, தாமஸை பணியிடைநீக்கம் செய்து பள்ளி முதல்வர் அருள்நாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT