கடலூர்

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா

7th Sep 2019 08:42 AM

ADVERTISEMENT

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் எஸ்.விநாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தலைமை ஆசிரியை சி.உமாராணி வரவேற்றார்.  உதவித் தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.
சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமை ஆசிரியர் மு.சிவகுரு தலைமை வகித்தார். சிதம்பரம் சுப்ரீம் அரிமா சங்க நிர்வாகிகள் ஏ.சிவா, எஸ்.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பூவாலை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஜி.தியாகராஜன் சிறப்புரையாற்றினார். அரிமா மாவட்ட முதலாம் துணை ஆளுநர் பெரி.முருகப்பன் ஆசிரியர்களுக்கு நூல்களை பரிசளித்தார்.
காட்டுமன்னார்கோவில்:  ஜி.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு கல்விக் குழும தலைவர் ஜி. குமாரராஜா தலைமை வகித்தார். பள்ளி செயலர்  ஜி.கே.அருண், இயக்குநர் ஜி.கே. அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.  பள்ளி முதல்வர் கே.பார்த்திபன் நன்றி கூறினார்.
வடலூர்: வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுத்த சன்மார்க்க நிலையம் இணைந்து நடந்திய ஆசிரியர் தின விழா வள்ளலார் குருகுலம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  விழாவுக்கு பள்ளித் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து, ஆசிரியர் பணியை பாராட்டி பேசினார்.
மேலும், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஜெயலட்சுமி செல்வராஜ், வடலூர் சார்-பதிவாளர் பி.ரங்கராஜ், காவல் உதவி ஆய்வாளர் சி.கமலஹாசன், செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம், பள்ளித் தலைமையாசிரியர் பூர்ணிமாதேவி, உதவி தலைமையாசிரியர் வேலவன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவரும், வங்கி ஊழியருமான ஜெயக்குமார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். 
வடலூர் அரிமா சங்கம் சார்பில் புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவுக்கு, சங்கத் தலைவர் எஸ்.முருகன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ரா.திருமுருகன் வரவேற்றார். 
அரிமா சங்க மண்டலத் தலைவர் ஜி.சந்திரகாசு, மாவட்டத் தலைவர் ஜி.சித்தார்த்தன், முன்னாள் தலைவர் ஆர்.ஞானசேகரன், வடலூர் செயலர் ராஜேந்திரன், கருங்குழி மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திராவிட மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
 நெய்வேலி, 28-ஆவது வட்டம், மாதிரி ஜவஹர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வர் மருதாத்தாள் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் 400 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவம் கொண்ட முகமூடியை அணிந்து கலந்துகொண்டனர். 
பண்ருட்டி: பண்ருட்டி ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ரோட்டரி இன்னர்வீல் சங்கம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா, பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. சக்தி கல்விக் குழும தலைவர் அ.ப.சிவராமன் தலைமை வகித்தார்.  
நிர்வாக இயக்குநர் ஆர்.சந்திரசேகர், இயக்குநர்கள் எஸ்.வைரக்கண்ணு, வி.பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT