கடலூர்

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்

7th Sep 2019 08:41 AM

ADVERTISEMENT

கடலூர் பிரதான சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. 
கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் வணிக நிறுவனங்கள், பெண்கள் கல்லூரி, அரசு அலுவலகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது. 
இந்தப் பணி முழுமையடையாததால் கழிவு நீர் வெளியேறி பிரதான சாலையில் வழிந்தோடுகிறது. மேற்கண்ட இடத்தில் பெண்கள் கல்லூரி அமைந்துள்ளதால் மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 
எனவே, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT