கடலூர்

ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

7th Sep 2019 08:39 AM

ADVERTISEMENT

காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் பணம் திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர். 
 காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் கொடிக்கால் தெருவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மனைவி சாந்தி. இவர், மேலராதாம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 4-ஆம் தேதி காட்டுமன்னார்கோவிலில் உள்ள தேசிய வங்கியில் சாந்தி ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்துக்கு வந்தார். 
அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பேருந்தில் ஏறும்போது கூட்டம் அதிகமாக இருந்ததாம். பின்னர் பேருந்துக்குள் சென்று தனது பையை சாந்தி திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், செல்லிடப்பேசி ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து அவர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT