கடலூர்

5 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

4th Sep 2019 09:57 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் 5 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
இதன்படி, வேப்பூர் வட்டாட்சியர் வி.செந்தில்வேல், திட்டக்குடி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். வேப்பூருக்கு புதிய வட்டாட்சியராக விருத்தாசலம் கோட்ட கலால் அலுவலர் ஏ.கமலா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் எம்.கண்ணன் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு திட்டக்குடி வட்டாட்சியர் எஸ்.புகழேந்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியர்கள் என்.செந்தில்குமார், விருத்தாசலம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், ஜெ.ரவிச்சந்திரன் வேப்பூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தியது  குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT