கடலூர்

விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு: பாதுகாப்புப் பணியில் 1,200 காவலர்கள்

4th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக, விநாயகர் சிலைகள் புதன்கிழமை கரைக்கப்படுவதையொட்டி மாவட்டத்தில் 1,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சில சிலைகள் முதல் நாளிலேயே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.மேலும்,  1,383 சிலைகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகள் 3 மற்றும் 5 நாள் பூஜைக்குப் பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். 
 அதன்படி, புதன்கிழமை (செப்.4) சிலைகளை கரைப்பதற்கான செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 
கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிலைகள் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள சி.புதுப்பேட்டையிலும், காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிலைகள் வீரநல்லூரிலுள்ள வடவாறிலும் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 இந்தப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில், கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியன் தலைமையில் 6 துணை கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். 
ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காலை 11 மணிக்கு மேல் கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT