கடலூர்

மாவட்ட டேக்வாண்டோ போட்டி: என்எல்சி மகளிர் பள்ளி அணி வெற்றி

4th Sep 2019 09:59 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில், என்எல்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடலூர் மாவட்ட அமெச்சூர் டேக்வாண் டோ சங்கம், என்எல்சி இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 15-ஆவது டேக்வாண்டோ போட்டிகள் நெய்வேலி வட்டம் 9-இல் உள்ள என்எல்சி நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. 
தொடக்க விழாவுக்கு என்எல்சி பள்ளிகளின் செயலர் எஸ்.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணர்வு, கல்வி மற்றும் விளையாட்டுத் துறை தலைமைப்  பொது மேலாளர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். 
கடலூர் மாவட்ட டேக்வாண்டோ சங்கத்  தலைவர் டி.இளையராஜா கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். சங்கச் செயலர் எஸ்.வி.பழனி முன்னிலை வகித்தார். என்எல்சி இந்தியா நிறுவன கல்வித் துறை ஊழியர் ஹெச்.சையத்  அசமத்துல்லா வரவேற்றார்.
இந்தப் போட்டிகளில், கடலூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 12 பள்ளிகளைச் சேர்ந்த 340 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 12, 14 மற்றும் 17 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் நெய்வேலி வட்டம்-11, என்எல்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து 9-ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பிரிவில் விருத்தாசலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அடங்கிய விக்டரி டேக்வாண்டோ சங்கம் முதலிடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு என்எல்சி தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், என்எல்சி பள்ளிகளின் செயலர் எஸ்.விநாயகமூர்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்வித் துறை கூடுதல் தலைமை மேலாளர் அ.அப்துல் காதர் செய்திருந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT