கடலூர்

தீ விபத்தில் வீடு சேதம்

4th Sep 2019 09:57 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடு சேதமடைந்தது. 
 பண்ருட்டி, திருவதிகையில் வசிப்பவர் பழனி. இவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு அதே பகுயில் உள்ள சக்கரபாணி நகர் 1-ஆவது தெருவில் உள்ளது. தென்னங்கீற்றால் தடுக்கப்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் ஓட்டுநர் ராஜாவும், மற்றொரு பகுதியில் பாத்திர வியாபாரி பாலு என்பவரும் வசித்து வந்தனர். 
  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு விளக்கில் இருந்து வீட்டில் தீ பரவியது. இதில் இருவரது வீட்டில் இருந்த பொருள்கழும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வி.மணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT