கடலூர்

செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக தின விழா பூஜை

4th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் அமைந்துள்ள செல்வவிநாயகர், திரெளபதியம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதன் 7-ஆம் ஆண்டு தின சிறப்பு பூஜை  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
காலை 8 மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு ஆலய அர்ச்சகர் ஜி.அருண்தியாகேஷ் தலைமையில் அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை, கலச அபிஷேகம், அடுக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவமும், இரவில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் இரா.ரமேஷ்பாபு, ஆய்வர் கு.சுபத்ரா, செல்வவிநாயகர் ஆலய வழிபடுவோர் அறக்கட்டளை தலைவர் கே.ராஜேந்திரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT