கடலூர்

குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 09:56 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கை பூங்காவாக மாற்ற அனுமதி அளித்தும் பணிகள் நடைபெறாததை கண்டித்தும், உடனடியாக குப்பை கிடங்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் நடைபெற்ற இந்த 
ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை 
வகித்தார். நிர்வாகிகள் டி.புருஷோத்தமன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாயவேல், ரவிச்சந்திரன், முனுசாமி, மணிவண்ணன், கலியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் எம்.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில், கடலூர் நகராட்சி மற்றும் பாதிரிகுப்பம், கோண்டூர், நத்தப்பட்டு, உப்பலவடி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ஒருங்கிணைந்த வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும், பாதிரிக்குப்பம் ஊராட்சி கூட்டுறவு நகர், கோண்டூர் ஊராட்சி குறிஞ்சிநகர் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி அமைக்கப்படும் செல்லிடப்பேசி கோபுரங்களை அப்புறப்படுத்த வேண்டும்,  கடலூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 பல்வேறு குடியிருப்போர் சங்கங்களின் தலைவர்கள் அப்பாதுரை, தேவநேசன், கண்ணன், ராஜசேகர், காசிநாதன், காத்தவராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT