கடலூர்

காப்பீட்டு வார விழா

4th Sep 2019 09:59 AM

ADVERTISEMENT

பண்ருட்டியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தில் 63-ஆவது  காப்பீட்டு (இன்சூரன்ஸ்) வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
எல்ஐசி நிறுவனம் சார்பில் காப்பீட்டு வார விழா ஒவ்வோர் ஆண்டும் செப்.1 முதல் 7-ஆம் தேதி வரை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 63-ஆவது வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள் நலன் கருதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
பண்ருட்டி எல்ஐசி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற காப்பீட்டு வார விழாவை, கடலூர் தொகுதி எம்பி  டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். கிளை மேலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மனமகிழ் மன்றச் செயலர் வைத்திலிங்கம் வரவேற்றார். ஊழியர் சங்கத் தலைவர் ஆரோக்கியராஜ், சங்கச் செயலர் பொன்மலர்,  வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் எம்.நடராஜன், முகவர் சங்கச் செயலர் ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 நிகழ்ச்சியில் முன்னாள் ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டனர். முகவர்கள், பாலிசிதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிர்வாக அதிகாரி ரமேஷ் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT