கடலூர்

ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

4th Sep 2019 09:57 AM

ADVERTISEMENT

கடலூரில் ஆற்றில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. 
 கடலூர் புதுவண்டிப்பாளையம் நத்தவெளி சாலையைச் சேர்ந்தவர் ம.வடிவேல் (45). எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவரை அதன்பிறகு காணவில்லையாம். அவரது மனைவி தனலட்சுமி பல்வேறு இடங்களில் அவரை தேடினாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கடலூர் குண்டுசாலை, தென்பெண்ணை ஆற்றில் இருந்து வடிவேல் சடலமாக மீட்கப்பட்டார். 
 இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸார் வடிவேலுவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி 
வைத்தனர். 
மேலும், தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT