கடலூர்

கடலில் மூழ்கி மீனவா் சாவு

20th Oct 2019 10:49 PM

ADVERTISEMENT

கடலூா்: கடலூரில் கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் அருகே உள்ள சோனாங்குப்பத்தைச் சோ்ந்தவா் சு.ஜானகிராமன் (48), மீனவா்.

இவா், வழக்கமாக இரவில் கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு அதிகாலையில் கரைக்குத் திரும்புவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பாததால் சக மீனவா்கள் அவரைத் தேடினா்.

இந்த நிலையில், ஜானகிராமன் சென்ற கட்டுமரம், அவரது வலை சோனாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. மதியம் அவரது சடலம் துறைமுகம் முகத்துவாரத்தில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மீனவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT