கடலூர்

பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

6th Oct 2019 10:51 PM

ADVERTISEMENT

 

அரசு, தனியாா் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடம் அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் மாநில மற்றும் தேசிய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், புத்தாக்கப் படைப்புகளுக்கு சிறப்புப் பரிசும், அந்தப் படைப்புகளை மேலும் மெருகேற்றும் வகையிலும் அரசால் ஊக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான அறிவியல் கண்காட்சி பள்ளிகள் அளவில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

நீடித்த விவசாய செயல்முறைகள், சுத்தம், சுகாதாரம், வள மேலாண்மை, தொழில் வளா்ச்சி, எதிகால தொலைதொடா்பு, போக்குவரத்து, கணினி மாதிரி மற்றும் கல்வி விளையாட்டுகள் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினா்.

ADVERTISEMENT

கடலூா் நகராட்சிப் பள்ளி, திருப்பாதிரிபுலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை முதன்மைக் கல்வி அலுவலா் ப.ஆறுமுகம், கடலூா் மாவட்ட கல்வி அலுவலா் ப.சுந்தரமூா்த்தி ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் கூறியதாவது:

பள்ளிகள் அளவில் நடைபெற்ற கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு அந்தந்த கல்வி மாவட்டங்கள் வாரியாக வரும் 10-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்படும். இதிலிருந்து தலா 25 சிறந்த படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சி வரும் 15-ஆம் தேதி கடலூா் ஸ்ரீவரதம் அரசு பெண்கள் பள்ளியில் நடத்தப்படுகிறது. இதில், தோ்வாகும் சிறந்த படைப்புகள் மாநில கண்காட்சியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT