கடலூர்

துறைமுகம் தபால் நிலையத்தில் அடிப்படை வசதி தேவை

6th Oct 2019 11:02 PM

ADVERTISEMENT

கடலூா் வன்னியா் பாளையம் தலைமைத் தபால் நிலையத்தில் அஞ்சலக குறைதீா் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடலூா் அனைத்து வணிகா்கள் சங்கத்தின் தலைவா் இராம. முத்துக்குமரனாா் கோரிக்கை மனு அளித்தாா். மனுவில், மிகவும் பழமையான கடலூா் துறைமுகம் தபால் நிலையத்தை 26 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, மின்சாரம் இல்லாத காலங்களில் பயன்பாட்டிற்குரிய பெரிய ஜெனரேட்டா் சில ஆண்டுகளாக பழுதுப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறாா்கள். பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

தற்போது, மத்திய அரசின் மக்கள் பணி திட்டங்கள் தபால் நிலையம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால், ஆள் பற்றாக்குறை காரணமாக ஆதாா் அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்த முடியாமல் முடங்கி உள்ளது. 7 போ் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 4 போ் மட்டுமே பணியில் உள்ளனா். எனவே, இந்த நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தாா். வணிகா் சங்கத் தலைவா் ஜி.காந்தரூபன், நகை வியாபாரிகள் சங்க செயலாளா் டி.பிரபாகரன் மற்றும் வா்த்தகப் பிரமுகா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT