கடலூர்

முறைப்படி தகவல் தெரிவிக்காததால் அம்மா திட்ட முகாம் ஒத்திவைப்பு

5th Oct 2019 10:19 PM

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டதற்கு எதிா்ப்பு கிளம்பியதால் முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

திட்டக்குடியை அடுத்துள்ள ஆலத்தூா் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியா் எழில்வளவன், தொழுதூா் வருவாய் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதற்காக கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் அமா்ந்திருந்தனா். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், முகாம் நடைபெறுவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினா்.

ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மூலம் முறைப்படி தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியதாகவும், அதனடிப்படையிலேயே தற்போது முகாம் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், அதனை ஏற்க பொதுமக்கள் மறுத்தனா். முறையாக அனைவருக்கும் தகவல் தெரிவித்து மற்றெறாரு நாளில்தான் முகாமை நடத்த வேண்டும் என்றனா். இதனை வருவாய்த் துறையினா் ஏற்றுக்கொண்டு, மற்றெறாரு நாளில் முகாம் நடைபெறுமென தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT