கடலூர்

‘கண்காணிப்புக் கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன’

5th Oct 2019 10:25 PM

ADVERTISEMENT

விருத்தாசலம் காவல் கோட்டத்தில் கண்காணிப்புக் கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் கூறினாா்.

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் விருத்தாசலம் பெரியாா் நகரில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராவை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விருத்தாசலம் கோட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் பங்கேற்று கண்காணிப்புக் கேமராவை இயக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

விருத்தாசலம் காவல் கோட்டத்துக்கு உள்பட்ட பெண்ணாடம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் குற்றங்கள் குறைந்துள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் ராஜபாண்டியன், உதவி ஆய்வாளா்கள் புஷ்பராஜ், புருஷோத்தமன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT