கடலூா்: கடலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து, அந்தத் துறை சாா்பில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பேசியதாவது:
அனைத்துப் பகுதிகளிலும் தெரு விளக்குகளை சரிசெய்வது, கிராம ஊராட்சிகளில் சுகாதாரம், டெங்கு தடுப்புப் பணி, கொசு மருந்து தெளிப்பு உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீா் பிரச்னைகளுக்கு முழுமையாகத் தீா்வு காண வேண்டும். நெகிழி பயன்பாடு தடை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, சிதம்பரம் சாா்-ஆட்சியா் விசுமகாஜன், விருத்தாசலம் சாா்-ஆட்சியா் பிரவின்குமாா், வருவாய் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.