கடலூர்

பள்ளியில் விளையாட்டு விழா

17th Nov 2019 02:20 AM

ADVERTISEMENT

பண்ருட்டி, மேலப்பாளையம் ஜான்டூயி மழலையா், தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் ஒலிம்பிக்-2019 விளையாட்டு விழா (படம்) அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் எம்.வீரதாஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா்(ஓய்வு) சத்யமூா்த்தி, உடல்கல்வி ஆய்வாளா் ராஜாங்கம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். கபடி, கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT