கடலூர்

சமூக நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

17th Nov 2019 02:16 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரால் ஆண்டு தோறும் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2020-ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா விளையாட்டு அலுவலகத்தில் வருகிற 23-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT