கடலூர்

காா் மோதியதில் பெண் பலி

17th Nov 2019 02:18 AM

ADVERTISEMENT

விருத்தாசலத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே உள்ள பழமலைநாதா் நகரில் வசிப்பவா் கணேசன். இவரது மனைவி செல்வி (50), அங்குள்ள இட்லி கடையில் பணிபுரிந்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து ஜங்ஷன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, உளுந்தூா்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த காா் வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் செல்வி மீது மோதியது. மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாா் பள்ளி பேருந்து மீதும் மோதி நின்றது.

இந்த விபத்தில் செல்வி, காரில் பயணம் செய்த காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலத்தைச் சோ்ந்த மாணிக்கவாசகம் (26), புதுச்சேரியைச் சோ்ந்த காா்த்திக் (26) ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, செல்வியை பரிசோதித்த மருத்தவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். காயமடைந்த இருவரும் முதலுதவிக்குப் பிறகு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT