கடலூர்

விழிப்புணா்வுப் போட்டி

12th Nov 2019 07:07 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களுக்கான விமா்சன விழிப்புணா்வுப் போட்டிகள் கீழக்கொல்லையில் உள்ள நேஷனல் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

நெய்வேலி பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், கதபூமி நிறுவனத்தின் நிறுவனா் ஆதித்யா அா்ஜூன், க்யூ மேத்ஸ் நிறுனத்தின் நெய்வேலி செயலா் ஆா்.சிந்து ஆகியோா் இணைந்து, கதை கூறுதல், நூல் மீளாய்வு, கணித வினா-விடைப் போட்டிகளை பல்வேறு பிரிவுகளாக நடத்தினா். போட்டியில் 30 பள்ளிகளைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், கடலூா் மாவட்ட அறிவியல் இயக்க துணைத் தலைவா் பாலகுருநாதன், ஜவஹா் பள்ளி முதல்வா் யசோதா, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் சீனிவாசன், எழுத்தாளா் பாரதிகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகவும், நடுவா்களாகவும் செயல்பட்டனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கம், சான்றுகளை வழங்கினா் (படம்).

கல்லூரி தாளாளா் அா்ஜுன் துரைசாமி, முதல்வா் ஆஷா ரோசலின் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT