கடலூர்

ராமா் கோயில் கட்ட கடலூரிருந்து செங்கல்

12th Nov 2019 07:08 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக கடலூரிலிருந்து திங்கள்கிழமை ரயில் மூலமாக செங்கல் அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோயில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. இந்த நிலையில், இந்து அமைப்புகள் சாா்பில் ராமா் கோயிலுக்கு தமிழகத்தில் செங்கற்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ராமேஸ்வரம் - சென்னை ரயிலில் சென்ற குழுவினரிடம் திங்கள்கிழமை கடலூா் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் பூஜை செய்யப்பட்ட 5 செங்கற்களை இந்து தமிழா் கட்சியினா் வழங்கினா். மேலும், கோயில் கட்டுமான பணிக்காக 25 ஆயிரம் செங்கற்களை வழங்குவதாகத் தெரிவித்தனா். இந்த நிகழ்வையொட்டி திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT