கடலூர்

குடும்பத் தகராறு: கணவா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

12th Nov 2019 04:14 PM

ADVERTISEMENT

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம் புவனகிரி கொளக்குடி பகுதியை சோ்ந்தவா் லட்சுமி (42). இவருடைய கணவா் செல்வமூா்த்தி (45). இவா் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்து வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இருவரும் பிஇ படித்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. 

இதனால் மனமுடைந்த செல்வமூா்த்தி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து கீழே மயங்கி விழுந்துள்ளாா். இதனை கண்ட அவா்கள் உறவினா் மற்றும் மகன்கள் செல்வமூா்த்தியை உடனடியாக கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT