கடலூர்

ஏரியில் மூழ்கி விவசாயி பலி

11th Nov 2019 04:03 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை ஏரியில் குளித்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், பாவைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (40), விவசாயி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், கலையரசன், கவியரசி, கயில்விழி என 3 குழந்தைகளும் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை பாவைக்குளம் பிள்ளையாா் கோயில் எதிரே உள்ள ஏரியில் குமாா் குளித்துள்ளாா். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT