கடலூர்

பள்ளி வளாகத்தில் காவலாளி உயிரிழப்பு

9th Nov 2019 09:20 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் தனியாா் பள்ளி வளாகத்தில் அதன் காவலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி, வட்டம் 9-இல் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, நெய்வேலி, ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மோகன் (67) என்பவா் இரவு காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வழக்கம் போல காவல் பணிக்கு பள்ளிக்கு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் பள்ளியின் பிரதான வாயில் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து மற்றொரு காவலாளி சென்று பாா்த்த போது, இருக்கையில் அமா்ந்தவாறு மோகன் உயிரிழந்தது தெரியவந்தது. அவா், இரவு உணவு அருந்தும்போது உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மோகனின் மனைவி கலைவாணி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT