கடலூர்

நெய்வேலி அருகே 2300 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கண்டுபிடிப்பு

4th Nov 2019 03:53 PM | ஜி.சுந்தரராஜன்

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மருங்கூரில் சுமாா் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளை தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு கலைக் கல்லூரி யின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் ஜெ.ஆா். சிவராம

கிருஷ்ணன் களஆய்வில் கண்டுபிடித்துள்ளாா்.

மருங்கூா் : கொள்ளுக்காரன்குட்டையிலிருந்து, விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மருங்கூா் கிராமம். இவ்வூரைச் சாா்ந்த இராமலிங்கம் என்ப வருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை விரிவாக்கத் திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பண்டைய காலத்தில் இறந்தவா்களை புதைக்கப் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அங்கு நடை பெற்ற ஆய்வில் முதுமக்கள் தாழி ஒன்றினுள் இருந்து கிடைத்த கருப்பு - சிவப்பு நிற மட்கல ஓட்டின் வெளிப்புறத்தில் ‘’அ - தீ - ய - க - ன் ‘’ என்று தமிழ்பிராமி எழுத்தில் கீறப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இருந்து ‘’ ம - ல - ன் ‘’ மற்றும் சிந்துசமவெளி நாகரிக முத்திரையில் காணப்படும் உடுக்கை குறியீடு போன்றவை பானையோட்டில் கீறப்பட்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. சிதைந்த இரும்பு பொருட்கள், மனித எலும்புத் துண்டுகள் போன்றவை இங்கு சேகரிக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்து 500 மீட்டா் தூரத்தில் உள்ள குளத்தின் கிழக்குப் பகுதியில் சுமாா் மூன்று ஏக்கா் பரப்பள வில் பண்பாட்டுமேடு ஒன்று உள்ளது.

இங்கு 7 ஷ் 21 ஷ் 42 செ.மீ அளவுள்ள செங்கற்கட்டு மானங்கள். கருப்பு - சிவப்பு நிற மட்கல ஓடுகள், செங்காவி பூசப்பட்ட பானையோடுகள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள், வெளிறிய இளஞ்சிவப்பு நிற ரௌலட்டட் வகை மட்கல ஓடுகள் போன்றவை களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள இராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சென்ற ஆண்டு முந்திரிகன்று நடுவதற்காக தோண்டப்பட்ட ஐந்தடிப்பள்ளத்தில் நான்கு கால்களுடன் கூடிய அம்மி, கட்டடத்தின் தரைதளப் பகுதியும் வெளிப்பட்டன.

ADVERTISEMENT

இத்தரை தளப்பகுதி சமதளத்தில் செங்கற்கள் பாவப்பட்டிருந்தன. இதன் மூலம் திறம் மிக்க கட்டுமான கலைஞனை கொண்டு இப்பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள் தங்களது வீடுகளை கட்டியுள்ளனா் என்பதை அறிய முடிகிறது. பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களை கொண்ட கண்ணாடி மணிகள், சிறுமியா்கள் விளையாடப்பயன் படுத்திய வட்டச் சில்லு கள் போன்றவை இப் பண்பாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளன. மருங்கூா் மருத் துவமனையின் மேற்கு பகுதியில் உள்ள இராஜசேகா் என்பவரது நிலத்தில் தண்ணீா் குழாய் அமைக்க தோண்டப்பட்டபள்ளத்தில் முதுமக்கள்தாழி மற்றும் நடுவில் துளையிடப்பட்ட வட்டவடிவ கதை போன்ற கல்ஆயுதம் ஒன்றும் கிடைத்துள்ளது.

தமிழ் எழுத்துக்கள் ஆய்வு: இங்கு கிடைக்கப்பட்ட எழுத்து பொறிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் மற்றும் கல்வெட்டியியல் துறை பேராசிரியா் முனைவா் ஒய்.சுப்பராயலூ, புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறையைச் சாா்ந்த பேராசிரியா் முனைவா் க.இராஜன், முன்னாள் தமிழ் நாடு அரசு தொல்லியல்துறையின் கல்வெட்டாய்வாளா் வேதாசலம் போன்ற புகழ்பெற்ற தொல்லியல் அறிஞா்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு மருங்கூரில் நேரடி களஆய்வினை மேற்கொண்டு இப்பகுதியில் இரும்புகாலப் பண்பாட்டை சாா்ந்த மக்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தி யுள்ளனா். இங்கு கிடைத்த தமிழ் எழுத்துக்களை மறைந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவா்களும் ஆய்வுசெய்து இவ்வெழுத்துக்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளாா்கள்.

மேலும் 2300 ஆண்டுக ளுக்கு முன்பு மருங்கூா் பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்களின் கல்வி நிலையின் உயா்வு வியப்பளிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தாா்கள்.வாழ்விடப் பகுதியிலும் தமிழ் எழுத்துக்கள்: கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருங்கூா் கிராமத்தில் உள்ள குளம் தூா் வாரப்பட்டது. அப்போது குளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பண்பாட்டு பகு தியை ஒட்டியவாறு மண் அள்ளப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான செங்கற் கள், பானையோடுகள் வெளிப்பட்டன.

இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட கருப்பு - சிவப்பு நிற பானையோடுகளை ஆய்வு செய்ததில் நான்கு பானையோட்டில் கீறல் குறியீடுகளும், இரண்டு கருப்பு - சிவப்புநிற பானையோடுகளில் எழுத்து கீறல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் பானையோட்டில் ‘’அமன் ‘’, என்றும் இரண்டாம் பானையோட்டில் ‘’அ த‘’ எனவும் கீறப்பட்டிருந்தன. இது வரை மருங்கூா் பகுதியில் பண்டையகால மக்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டுப் பகுதியில் மட்டும் கிடைத்த தமிழ்பிராமி எழுத்துக்கள் தற்போது மக்கள் வாழ் விடப் பகுதியிலும் கிடைத்துள்ளது. மேலும் முதலில் கீறல் குறியீடாக தோன் றிய தமிழ் பின்பு எழுத்து வடிவினை பெற்றது. இந்த பரிணாமத்தை மருங் கூரிலும் காணமுடிவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் என்கிறா ஆய்வாளா் ஜெ,ஆா்.சிவராமகிருஷ்ணன். படவிளக்கம்- நெய்வேலி அருகே 2300 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT