கடலூா்: புதுதில்லியில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோயில் ஆகிய நீதிமன்றங்களில் திங்கள்கிழமையன்று வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.